உம்மைப் பிரிந்து வாழ முடியாதையா

இயேசையா இயேசய்யா (2)

 

1.

திராட்சை செடியின் கொடியாக‌

உம்மில் நிலைத்திருப்பேன்

மிகுந்த கனி கொடுப்பேன்

உம் சீடனாயிருப்பேன்  நான் – உம்மைப்

 

2.

முன்னும் பின்னும் என்னை நெருக்கி

உம் கரம் வைக்கின்றீர்

உமக்கு மறைவாய் எங்கே போவேன்

உம்மை விட்டு எங்கே ஓடுவேன்  நான் – உம்மைப்

 

3.

பகைவர்கள் ஆயிரம் பேசட்டுமே

பயந்து போக மாட்டேன்

துன்பங்கள் ஆயிரம் சூழ்ந்தாலும்

சோர்ந்து போகமாட்டேன்  நான்- உம்மைப்

 

4.

நடந்தாலும் படுத்திருந்தாலும்

என்னை சூழ்ந்து உள்ளீர்

என் வழிகளெல்லாம் நீர் அறீவீர்

எல்லாம் உம் கிருபை  ஐயா – உம்மைப்

 

5.

கர்த்தாவே என்னை ஆராய்ந்து

அறிந்து இருக்கின்றீர்

உட்காருதலையும் எழுதலையும்

அறிந்து இருக்கின்றீர் – உம்மைப்



ummaib birinththu vazha mudiyathaiya

iyesaiya iyechayya (2)

 

1.

thiradsai sediyin kodiyaka‌

ummil nilaiththirubben

mikunthdha kani kodubben

um sitanayirubben  nan – ummaib

 

2.

munnum binnum ennai nerukki

um karam vaikkinrir

umakku maraivay engke boven

ummai viddu engke ooduven  nan – ummaib

 

3.

pakaivarkal aayiram bechaddume

payanththu boka madden

thunpangkal aayiram suznththalum

sornththu bokamadden  nan- ummaib

 

4.

natanththalum paduththirunththalum

ennai suznththu ullir

en vazikalellam nir arivir

ellam um kirubai  aiya – ummaib

 

5.

karththave ennai aaraynththu

arinththu irukkinrir

udkarudhalaiyum ezudhalaiyum

arinththu irukkinrir – ummaib